×

வேம்பார் ஆற்றை தூர்வாரி குடிநீர் பிரச்னை தீர்க்கப்படும் வசந்தம் ஜெயக்குமார் வாக்குறுதி

குளத்தூர், ஏப்.14: விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வசந்தம் ஜெயக்குமார் நேற்று குளத்தூரையடுத்த வேம்பார் பஸ்நிலையத்திலிருந்து பிரசாரத்தை துவக்கினார். தொடர்ந்து வேம்பார் வடக்கு, வேம்பார் தெற்கு, பச்சையாபுரம், குஞ்சையாபுரம், முத்தையாபுரம், பெரியசாமிபுரம், மேல்மாந்தை, இ.வேலாயுதபுரம், கலைஞானபுரம், துலுக்கன்குளம், கீழவைப்பார், சிப்பிகுளம், சூரங்குடி, சூரங்குடி சிலோன்காலனி, சக்கனாபுரம், வீரகாஞ்சிபுரம், தத்தனேரி, கன்னிமார்கூட்டம், சங்கரலிங்கபுரம், ரெட்டடியாபட்டி, அரியநாயகிபுரம், சோலைமலையான்பட்டி, கீழவிளாத்திகுளம் பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது, விளாத்திகுளம் தொகுதியில் வெற்றி பெற்று திமுக ஆட்சி மலர்ந்ததும் இப்பகுதியில் பல வருடங்களாக தூர்வாரப்படாமல் கிடக்கும் வேம்பார் ஆறு தூர்வாரப்படும், அடிப்படைத் தேவையான குடிநீர் பிரச்சினை சீரமைக்கப்படும், மீன்களை பதப்படுத்துவதற்கு குளிர்சாதன கிடங்கு, பனைத் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் விதமாக பனை ஓலை உற்பத்தி பொருட்களுக்கு மானியக் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

பச்சையாபுரம் கிராமபகுதியில் உள்ள கடற்கரை சாலை சீரமைத்து தெருவிளக்குகள் அமைக்கபடும். பேருந்து நிழற்குடை அமைக்கப்படும் என்றார். விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் டேவிட், இமானுவேல், மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர்கள் அந்தோணிராஜ், சந்திரமோகன், பெப்பின், மாதவடியான், மாவட்ட விவசாய தொழிலாளரணி பால்பாண்டி, தூத்துக்குடி முன்னாள் மாவட்ட கவுன்சிலர் குட்டி, வேம்பார் ஊராட்சி செயலாளர்கள் ஆரோக்கியராஜ், தர்மநேசசெல்வின், ராஜபாக்கியம், பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், மகளிரணி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Tags : river ,Vasantham Jayakumar ,
× RELATED அணையில் தண்ணீர் திறப்பால் மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு